சம்பந்தன் பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை நீக்குமாறு கோரமாட்டார்

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மல்மவத்து பீடம் இரண்டாக பிளவுப்படும் அபாயத்தில் இருந்த போது நான்தான் குரல்கொடுத்திருந்தேன். அன்று என்னுடன் பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கும் பிரச்சினைக்கு தீர்கானவும் சம்பந்தன் மாத்திரமே குரல்கொடுத்தார். அவ்வாறு நடத்துக்கொண்ட சம்பந்தன் இன்று பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை நீக்குமாறு கோருவாரென நம்கையில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சமகாலத்தில் பௌத்த மதம் தொடர்பில் சமூக மட்டத்தில் எழுந்த பிரச்சினைகள் குறித்து இளம் பிக்குகள் ஒன்றியத்துடன் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறியதாவது,

2002ஆம் ஆண்டு நான் கூறினேன் பெரிய விகாரயை அபிவிருத்திச் செய்வோம் என்று.ஆனால், நான் மீண்டும் பிரதமராகும்வரை ஒன்றும் நடைபெறவில்லை. இன்று பௌத்த மதத்திற்கான முன்னுரிமை பற்றி பேசுபவர்கள் அன்று மஹிந்த ஆட்சியில் மல்வத்து பீடத்தை இரண்டாக பிரிக்க முற்பட்டவர்கள் என்பதை மறந்துள்ளனர்.

அதபோல் தளதா மாளிகைக்கு குண்டுவைத்து தகர்ப்போம் என்று கூறியிருந்தனர். பௌத்த மகா சங்கத்தில் பேதம் ஏற்பட்ட போது அந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகான எவரும் முன்வரவில்லை. அன்றில் இருந்த நான்தான் பௌத்த பாதுகாப்புக்காக பேசியுள்ளளேன். அதேபோல் பிரச்சினைகள் தொடர்ந்து சென்றால் பௌத்த மதம் அழிவை நோக்கிச் செல்லும் என்று என்னுடன் சம்பந்தனும் குரல் கொடுத்தார்.

பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டும் என்று அன்று குரல்கொடுத்த சம்பந்தன் ஒருபோதும் பௌத்த மதத்திற்காக முன்னுரிமையை நீக்குமாறு கோரிக்கை விடுப்பார் என்று நாம் நம்பவில்லை. விகாரைகளை ஆட்சிசெய்யும் அதிகாரம் எமக்கில்லை. 1931ஆம் ஆண்டு அப்போதைய நாட்டின் பௌத்த தலைவராக இருந்த டி.பி. ஜயதிலக்க விகாரைகளில் உண்டியல்களில் காசு சேகரிக்கும் முறையை கொண்டுவந்தார். ஆனால், 1960இல் சிறிமாவோ பண்டாரநாயக்க தொன்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க வேண்டும் என்று விகாரைகளில் உண்டியல்களுக்கு சீல் வைத்திருந்தார்.

எனவே, இந்த விளையாட்டை நிறுத்துங்கள். மதத்தை இழுக்காதீர்கள். நாங்களும் பௌத்தர்கள் தான். எங்களாலும் எதையும் சொல்ல முடியும். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கவே, பௌத்தர்கள் பலர் வாக்களித்தார்கள். மதத்துடன் அரசியல் நடத்தாதீர்கள். இது, உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்குத் தயாராவதற்காகச் செய்யும் சதித்திட்டமாகும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]