சம்பூரில் 5.5 கிலோகிராம் ஹெரோய்ன் மீட்பு

திருகோணமலை, சம்பூர், இலக்கந்தை கடற்கரையில் பல இடங்களில் புதைத்துவைக்கப்பட்டிருந்த ஹெரோய்ன் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, குறித்த போதைபொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, 5.5 கிலோகிராம் நிறையுடைய 21 ஹெரோய்ன் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு, விநியோகம் செய்வதற்காக இவை கடற்கரையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]