சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாயை அதிகரிக்குமாறு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்பாட்டமானது, இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளதோடு, இவ்வார்ப்பாட்டத்தில் மஸ்கெலியா பிரவுண்லோ, சீட்டன், லக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

குறித்த போராட்டம் சுமார் ஒரு மணித்தியாலயம் இடம்பெற்ற நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோட்ட தொழிலாளர்கள், ‘தற்போதைய நிலையில் எமது வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலைமையில் காணப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்தோடு, இதனாலேயே தாம் சம்பள உயர்வை அதிகரிக்குமாறு கோருவதாகவும், இதனால் தாம் மற்றுமின்றி தமது பிள்ளைகளும் சிறந்த கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள முடியாத நிலைமையில் உள்ளதுடன், அவர்கள் மந்த போஷாக்கிற்கும் உள்ளாகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே சம்பள உயர்வை அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் அதிகாரிகள் பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தோட்ட தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பள உயர்வை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து மலையகத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பள உயர்வு கோரி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]