சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த தனுஷ்!

பெரிய வீட்டு மருமகள் கேட்ட சம்பளத்தை கேட்டு ஒல்லி நடிகர் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்.
ஒல்லி தனது மச்சினி இயக்கத்தில் வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபல பாலிவுட் நடிகை ஒல்லியின் வில்லியாக நடித்து வருகிறார்.

அம்மணிக்கு ரூ. 4 கோடி சம்பளமாம்.
இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் பெரிய வீட்டு மருமகளான உலக அழகி நடிகையிடம் பேசிப் பார்த்தார்களாம். அம்மணி ரூ.10 கோடி சம்பளம் கேட்டதால் ஒல்லி அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்.

அதன் பிறகு கால் அழகி நடிகையை ஒப்பந்தம் செய்தார்களாம். உலக அழகி நடிகை ஒல்லியின் மாமனாருக்கு ஜோடியாக நடித்தவர். அவர் நடிப்பில் அண்மையில் வெளியான இந்தி படம் ஹிட்டாகியுள்ளது.

அதை எல்லாம் மனதில் வைத்து தான் ரூ.10 கோடி கேட்டிருப்பார் போன்று.