சம்பந்தன் மைத்திரியுடன் சந்திப்பு – உண்மையயைத் தெரிவித்த மைத்திரி

சம்பந்தன் மைத்திரியுடன் சந்திப்பு – உண்மையயைத் தெரிவித்த மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால தனக்கு ஏற்படுத்தப்படவிருந்த உயிராபத்தினைப் பற்றி சிறிசேன உணவுப்பூர்வமாக தெரிவித்ததாக இரா.சம்பந்தன்.

ஜனாதிபதியும், பிரதமரும் தாம் முன்வைத்த விடயங்கள் குறித்து உறுதியான தீர்மானத்தினை வெளிப்படுத்துவதற்கு முன்வரவேண்டுமென வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

இவ் இருவருக்குமான இடையிலான சந்திப்பானது நேற்றையதினம் மாலை 5மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கூட்டமைப்புக் கொண்டுள்ள தேசியப் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் கூட்டமைப்புக் கொண்டுள்ள அதீத கரிசனை தொடர்பில் சம்பந்தனால் எடுத்துக் கூறப்பட்டதோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அது தொடர்பில் கூட்டான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதனையடுத்து தமக்கு உறுதியான உத்தரவாதத்தினை வழங்க வேண்டும் என்று சம்பந்தன் கோரியதோடு தற்போதைக்கு தாம் எவ்விதமான இறுதியான நிலைப்பாட்டினை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி, மகிந்தவுடன் இணைந்தது குறித்து வினாவியபோது

மஹிந்தராஜபக்ஷவுடன் இணைந்தது தொடர்பாக வினாவியபோது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உணர்வுப்பூர்வமாக தனக்கு ஏற்படவிருந்த உயிராபத்து குறித்த கருத்துக்களை பகிர்ந்தாகவும் மற்றும் அதற்கான சாட்சியங்கள் உள்ளதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]