சம்பந்தன் உடல்நலக் குறைவினால், முதுமையினாலும் ஓய்வு- சுமந்திரனே அடுத்த தலைவர்??

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உடல்நலக் குறைவினால், முதுமையினாலும் பாதிக்கப்பட்டுள்ளதனால் தமது பொறுப்புக்களை சரிவர செய்வதில் சிரமப்படும் நிலையில் கூட்டமைப்பின் புதிய தலைவராக சுமந்திரனை நியமிக்கும் முயற்சியில் உயர்மட்ட ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கூட்டமைப்பின் அடுத்த தலைவராக நியமிப்பதற்குத் தேவையான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

“சம்பந்தன் மிகச் சிறந்த தலைவர். ஆனால் அவரது உடல்நிலை நன்றாக இல்லை. இதனால் அவர் கட்சியின் காப்பாளராக இருக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் விரும்புகின்றனர்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் மூப்பு நிலைப்படி நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவே, கூட்டமைப்பின் அடுத்த தலைவராக வரவேண்டும். எனினும், அவரது உடல்நிலை தீவிரமான அரசியல் செயற்பாட்டுக்குத் தலைமை தாங்குவதற்கு ஏற்றதாக இல்லாமையினால், சுமந்திரனை முன்னிறுத்த முயற்சிகள் நடப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

எனினும், இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிராகரிக்கப்பட்ட கட்சிகளின் அழுத்தங்கள் காரணமாகவே ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பாதிக்கப்பட்ட மக்கள் கொண்டாடியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கு கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

யாரும் தமக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்த கேப்பாபுலவு மக்கள், தமது பூர்வீக நிலங்களை மீட்கவே தாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலியை உணராத காரணத்தினாலேயே தம்மை வைத்து சம்பந்தன் சுமந்திரன் போன்றவர்கள் அரசியல் செய்வதாகவும் அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]