சமையல் செய்யாத மனைவி- தட்டிக் கேட்ட கணவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! பின்னர் நடந்த விபரீதம்

சமையல் செய்யாத மனைவியை கணவர் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவர் என்றும் பாராமல் கரண்டியால் கடுமையாக தாக்கினார்.

சென்னை அயனாவரம் பொன்னுவேல் புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி (43). இவரது மனைவி தனலட்சுமி. கார்த்தி கொத்தனார் வேலை செய்து வருகிறார். மனைவி தனலட்சுமி வீட்டில் சமையல் செய்யாமல் அடிக்கடி அவரது சித்தி அபிராமியின் பழக்கடைக்கு சென்று விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

நேற்றிரவு கார்த்தி சாப்பிட வீட்டிற்கு வந்தபோது சாப்பாடு இல்லை. மனைவி சமைக்கவில்லை. அப்போது சித்தி கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த மனைவி தனலட்சுமியை கண்டித்துள்ளார். சித்தியை பார்க்க ஏன் போனாய் என திட்டி வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால் தனலட்சுமி தனது சித்தி அபிராமியை அழைத்து வந்து சமையல் கரண்டியால் கார்த்தி தலையில் தாக்கினார். இதில் காயமடைந்த கார்த்தி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நெற்றியில் இடது புருவம் மற்றும் இடது முன்னங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. நெற்றியில் 4 தையல் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]