சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாப பலி

கொடைக்கானல் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், கணவன், மனைவி, மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகேயுள்ள மங்களம் கொம்பு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் என்பவர் சின்னாளபட்டியில் வசித்து வந்தார். ஆனால் விடுமுறைக்காக மனைவி மஞ்சுளா தேவி, மகள் விஷ்ணுப்பிரியா ஆகியோருடன் சொந்த ஊருக்கு வந்து தோட்டத்தில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில், வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 3 பேருமே, சம்பவ இடத்தில் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]