சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 300 ரூபாயால் அதிகரிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறுப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இலங்கையிலும் விலையை அதிகரிக்குமாறு இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.