சமைக்க மறுத்த மனைவி வெட்டி கொலை!

ஈரோடு மாவட்டத்தில் சமைக்க மறுத்த மனைவியை கணவன் மண்வெட்டியால் வெட்டி கொலை செய்துள்ளார்.

ரோஹித் காஜா(34) தோமினா(30)தம்பதிகள் கொல்கத்தா ஹசனாபாத் பகுதியை சேர்ந்தவர்கள். இணை்டு வருடங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம் – அந்தியூர் அருகே தாசரியூர் பகுதியில் குடியேறினர். இவர்கள் செங்கல்சூளையில் தொழில் புரிபவர்கள்.
நேற்று ரோஹித் காஜா தனது மனைவியை மதிய உணவு சமைக்க கூறியுள்ளார். சமைப்பதற்கு தோமினா மறுத்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த ரோஹித் மண்வெட்டியால் மனைவியின் தலையை வெட்டியுள்ளார்.

சக ஊழியர்கள் தோமினாவை வைத்திய சாலையில் அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து ரோஹித் தலைமறவாகியுள்ளார். இவரை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

உயிரிழந்த தோமினா நான்கு பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]