முகப்பு News Local News சமூர்த்தி அதிகாரிகளுக்கு இவ்வருட இறுதிக்குள் நிரந்தர நியமனம்

சமூர்த்தி அதிகாரிகளுக்கு இவ்வருட இறுதிக்குள் நிரந்தர நியமனம்

சகல சமூர்த்தி அதிகாரிகளுக்கும் இவ்வருட இறுதிக்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் பி. ஹரிஸன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவுவும் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தற்போது, 27 ஆயிரம் சமுர்த்தி அதிகாரிகளும், நான்காயிரத்திற்கும் அதிகமான சமுர்த்தி முகாமையாளர்களும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வருட இறுதிக்குள் மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com