சமூர்த்தி உதவித்தொகை மறுப்பு பயனாளிகள் ஆர்ப்பாட்டம்

அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசால் வழங்கப்படும் சமூர்த்தி உதவித்தொகை முறையாக வழங்காமலும், உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தே அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு முன்பாக 70ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் அம்பகமுவ பிரதேச செயலகத்திலிருந்து பேரணியாக ஆரம்பமாகி கினிகத்தேனை நகரம் வரை சென்று மீண்டும் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு முன்பாக வந்தடைந்தனர். பேரணியால் சில மணி நேரம் போக்குவரத்தும் பாதிப்படைந்திருந்தது.

சமூர்த்தி உதவித்தொகையாக கினிகத்தேனை பகுதி பிரதேசவாசிகளுக்கு அரசால் 2000 ரூபாய் தொடக்கம் 3500 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உதவித்தொகையில் சமூர்த்தி பயனாளிகளுக்கான நலன்புரி சேவைகளுக்காக ஒரு தொகை பணம் வெட்டப்பட்டு மிகுதி பணங்களை பயனாளிகளுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்தது.

இருந்தும் தற்பொழுது சில பயனாளிகளுக்கு இந்த உதவி தொகையை உரிய வேளையில் வழங்காமல் நிறுத்தப்பட்டிருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூர்த்தி பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சமூர்த்தி உதவி தொகையை எமக்கு அரசு வழங்க வேண்டும் என்பதை என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]