சமூக வலைத்தளங்கள் முடக்கம்

இலங்கை முழுவதும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேஸ்புக், வட்ஸ்அப், பேஸ்புக் மெசன்ஜர் ஆகிய பிரதான ன சமூக வலைத்தளங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் பல பகுதிகளில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் வேகமாக தகவல் பரவி வருவதால் சமூக வலைத்தளங்களை உடன் இடை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் வைபர், ஐஎம்ஓ போன்ற உரையாடல் செயலிகள் வழமை போன்று செயற்பட்டு வருகின்றன.

வன்முறையை தூண்டும் கருத்துக்கள் வெளியிடுவதன் காரணமாக பேஸ்புக் முடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கைக்களுக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]