சமூக வலைத்தளங்கள் மீதான தடை தொடர்ந்தும் நீடிக்கும்?

அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரையில், சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது.

கண்டியில் சமூகங்களுக்கு இடையில் பதற்ற நிலை தீவிரமடைந்ததை அடுத்து, கடந்தவாரம், சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.

இந்த தற்காலிக தடை 72 மணித்தியாலங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த தடை மேலும் தொடர்கின்றது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி செயலாரும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவருமான ஒஸ்ரின் பெர்னான்டோ, “சமூக வலைத்தளங்கள் மீதான தடை எப்போது நீக்கப்படும் என்று இப்போது கூற முடியாது. அது நிலைமைகளைப் பொறுத்து அமையும்” என்று தெரிவித்துள்ளார்.