சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்டம் உருவாக்க நடவடிக்கை

சமூக வலைத்தளங்களின் மூலம், இனங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்படுத்தும் கருத்துக்கள் பதிவிடப்படுவதை கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டம் விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இசிபத்தான கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘ஏனைய நாடுகளில் நடைமுறையில் உள்ள இத்தகைய சட்டங்கள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருகிறது.

சமூக ஊடகங்களில் இனவெறுப்பு கருத்துக்களை வெளியிடுவதைக் கட்டுப்படுத்த உலகில் பல நாடுகள் சட்டங்களை இயற்றியுள்ளன. இனவெறுப்பைத் தூண்டுவதை தடுக்கும் சட்டங்கள் பிரித்தானியாவில் உள்ளன.

சமூக ஊடகங்கள் தொடர்பாக ஏனைய நாடுகள் எத்தகைய சட்டங்களைக் கொண்டிருக்கின்றன என்று ஆராயுமாறு வெளிவிவகார அமைச்சிடம் பணித்துள்ளேன். நாம் அதனை பின்பற்றலாம். சமூக ஊடகங்களை தடை செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் எந்த நகர்வையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]