சமூக ஊடக முறைப்பாடுகள் அதிகரிப்பு

சமூக ஊடகங்கள் தொடர்பில் கடந்த மூன்று மாதங்களில் 720 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவிக்கின்றது.

பேஸ்புக் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக அந்த பிரிவின் ஊடகப் பேச்சாளர், பாதுகாப்பு பொறியிலாளர் ரொஷான் சந்திரகுப்தா கூறியுள்ளார்.

அதில் நூற்றுக்கு சதவீதமானவை போலி முகப்புத்தன கணக்குகள் தொடர்பானவை என்றும், டுவிட்டர், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள்தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமக்கு கிடைத்த முறைப்பாடுகள்தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]