சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை இன்று நீக்கம்

கடந்த சில நாட்களாக விதிக்கப்பட்டுள்ள சமூக ஊடகங்கள் மீதான தடை இன்று நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக், டுவிட்டர், வைபர், வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை இன்று நீக்கப்படும் என, இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் தகவல்கள் பரப்பப்பட்டமை காரணமாகவே சமூக வலைத்தளங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் இன்று அந்த தடை நீக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையை அடுத்து, சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.