சமூகத்தின் பிரச்சனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லக்கூடாது- அகிலா கனகசூரியம் தெரிவிப்பு

சமூகப்பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாமலாக்குவது, இளைஞர்களது பொறுப்பாகும்.இதனை ஒவ்வொரு இளைஞர்களினதும் தலையாய கடப்பாடாகும்.இன்று பல்வேறு வடிவங்களில் சமூகப்பிரச்சனைகள் உருவெடுத்துள்ளது என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு இளைஞர், யுவதிகளுக்கான மூன்று நாள் பயிற்சி முகாமின் இறுதிநாளாகிய இன்று(09) வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

சமூகத்தில் பல பிரச்சினைகள் நடைபெறுகின்றன.இதனால் எம் சமூகம் சீரழிந்து பல்வேறு பிரச்சனைகளைகளை முகம்கொடுத்து வருகின்றது. கலை,கலாச்சாரம், பண்பாடு, கல்வி,சமயம் கட்டி பாதுகாக்கப்படவேண்டும்.சமூகத்தை சீரழிக்கும் பிரச்சினைகள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படக்கூடாது. இதற்காக இளைஞர்கள் பொறுப்புடன் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இன்றைய இளைஞர்கள்,யுவதிகள் சவால்களை எதிர்கொண்டு சவால்களை வெல்வதற்குரிய விடயங்களையும்,யுகத்திகளையும் கையாண்டு முன்னேறுவதற்குரிய விடயங்களை திட்டமிடல் செய்யவேண்டும்.

திட்டமிடல்கள் மேற்கொள்ளாத எந்த விடயங்களும் பயனளிக்காது.இன்றைய இளைய சமூகம் எதிர்காலத்தை வளப்படுத்தக்கூடிய கற்றல்களை தேடிப்படிக்க வேண்டும்.படித்த விடயங்களை நாம் வாழ்க்கையோடு சரியாக பயன்படுத்த வேண்டும். இதற்காக கற்கின்ற விடயங்கள் தொடர்பில், எமக்குள்ளே உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத பிரச்சினைகள் அதிகம் உள்ளன.

இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய விடயங்களை கற்க வேண்டும். அதேவேளை ஏனையவர்களுடன் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும்.
எதிர்கால மக்களுடைய இருப்பும், சமூகப்பிரச்சினைகள் இல்லாத சமூகத்தினை உருவாக்குவதும் இளைஞர்களின் கையிலே தங்கியுள்ளது.இதற்காக இளைஞர் சமூகம் அர்ப்பணிப்புடனும்,தூரநோக்குடைய சிந்தனையுடன் செயற்படவேண்டும்.மாறிவரும் சமூகத்தில் மாற்றங்கள் பல நடைபெறுகின்றது.மாற்றங்களுக்கு ஏற்ப எம் சமூகத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்லவேண்டும்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]