சமுர்த்தி வங்கி விவகாரத்தால் கூட்டரசுக்குள் குழப்பம்

சமுர்த்தி வங்கியை இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெளியிட்ட அறிவிப்புக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

கொழும்பில் நேற்று நடந்த ஐதேககவின் மே தின பேரணியில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, சமுர்த்தி வங்கி விரைவில் இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படும் என்று கூறினார்.

சமுர்த்தி வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் மத்திய வங்கியினால் கண்காணிக்கப்படும். ஊழியர் சேம இலாப நிதியமும் நிதியமைச்சினால் கண்காணிக்கப்படுகிறது.

எனினும், சமுர்த்தி வங்கி எந்தவொரு நிறுவனத்தினாலும் கண்காணிக்கப்படவோ நிர்வகிக்கப்படவோ இல்லை. எனவே, விரைவில் அது மத்திய வங்கியில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்” என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று முன்னாள் சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் சமுர்த்தி வங்கிக்கு 1,754 கிளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமுர்த்தி வங்கி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]