சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வாகன விபத்தில் பலி!

குடும்ப உறவினரது மரண வீட்டிற்கு மோட்டார் சைக்கிகளில் சென்றுகொண்டிருந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிந்த சம்பவமொன்று மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை 13.03.2018 இரவு 10 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் மட்டக்களப்பு- வந்தாறுமூலை புக் ஹவுஸ் வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 54 வயதுடைய கருணாகரன் வரதன் என்பவரே உயிரிழந்தவரென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கிரான் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்தார்.

இவர் வந்தாறுமூலை பிரதேசத்திலிருந்து கிரான் பிரதேசத்திற்குச் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவேளை முன்னாள் சென்ற பஸ் வண்டியை முந்துவதற்கு எத்தணிக்கையில் எதிரே வந்த லொறி மோதியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

லொறியின் சாரதி ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அந்த லொறி திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]