சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘அப்பா’ படத்திற்கு பின்னர் அவர் நடித்து இயக்கும் அடுத்த படமான ‘தொண்டன்’ திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விக்ராந்த், சமுத்திரக்கனி, சூரி, தம்பி ராமையா உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் தற்போது முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை சுனைனா ஒப்பந்தமாகியுள்ளார். நீர்ப்பறவை படத்திற்கு பின்னர் சுனைனாவுக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில், ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவில், ரமேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வசுந்தரா தேவி சினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.