சமுத்திரகனி – M.சசிகுமார் கூட்டணி மீண்டும் இணையும் ‘நாடோடிகள் 2’

நாடோடிகள் 2

சமுத்திரகனி- M.சசிகுமார் கூட்டணி மீண்டும் இணையும்      ‘நாடோடிகள் 2’

2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது.

மீண்டும் சமுத்திரகனி – M.சசிகுமார் வெற்றி கூட்டணி இணையவுள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் “நாடோடிகள் – 2” திரைப்படம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் – ஜாக்கி, படத்தொகுப்பு – A.L.ரமேஷ்.

தமிழர் திருநாளன்று இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட படக்குழுவினர், நாடோடிகள் படத்தை போன்றே நாடோடிகள் 2 படமும் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்படி சிறந்த விருந்தாக அமையும் என்று கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]