சமாதானம்,சகவாழ்வு, நல்லிணக்கம் எண்ணக்கருக்கள் மாணவப்பருவத்திலேயே விதைக்கப்பட வேண்டும்

சமாதானம் சகவாழ்வு நல்லிணக்கம் எண்ணக்கருக்கள் மாணவப்பருவத்திலேயே விதைக்கப்பட வேண்டும் என வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையும், ஸ்ரீகோரக்கர் தமிழ் மகாவித்தியாலயமும் இணைந்து ஏற்பாடு செய்த சித்திரைப் புத்தாண்டு கலாச்சார விளையாட்டு நிகழ்வு இன்று சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.விஜயகுமாரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மைதானத்தில் மூவின மாணவர்கள் எவ்வித பேதமுமில்லாமல் மிகவும் சிநேகபூர்வமாக போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்கள் சந்தோசமாக இருந்தது.இதே நிலைமை சமூகத்திலும் இருக்குமாக இருந்தால் இலங்கை நல்லிணக்கத்திற்கும் சகவாழ்விற்கும் சிறந்த நாடாக மிளிரும் என்பதில் ஐயமில்லை.

கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து நாட்டில் சகவாழ்வு மலரவேண்டும். அதற்கு கட்டாயம் கூறுகின்ற ஒரு நிகழ்வாக இது அமையுமாகவிருந்தால் உண்மையில் இது ஒரு வரலாற்று நிகழ்வுதான். இதையிட்டு நாம் அகமகிழ்வடைகின்றோம்.

சமாதானம் சகவாழ்வு நல்லிணக்கம்

இங்கு பல விடையங்களை கற்றுக்கொள்கின்றோம். ஒரு மத கலாச்சார விடயங்களை மற்ற மதத்தினர் அறிய வாய்ப்புக்கிடைக்கின்றது. இங்கு பல பாரம்பரிய விளையாட்டுக்களை நானே முதற்தடவையாக பார்க்கின்றேன்.

பரம்பரை பரம்பரையாக கட்டிக்காத்து வந்த பாரம்பரியங்களை நாம் மறந்துவிடலாகாது. அதன் ஒரு அங்கமாக இங்கு பல பாரம்பரிய விளையாட்டுக்களை கண்டுகளிக்கக் கூடியதாயிருந்தது- என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]