திருமணமாகி ஒரே மாதமேயான நிலையில் “யூ டர்ன்” அடிக்கும் சமந்தா

கன்னடத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்ற ‘லூசியா’ படத்தை இயக்கிய பவன் குமார் இரண்டாவதாக இயக்கிய படம்தான் ‘யூ டர்ன்’. ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த இந்தப் படமும் வெற்றிப் பெற்றதோடு விமர்சகர்களிடமும் நல்ல பெயரைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை ‘சைத்தான்’, ‘சத்யா’ படங்களின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்குவதாகவும், அதில் நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதனை பிரதீப் கிருஷ்ண மூர்த்தி மறுத்து விட்டார்.

இந்த நிலையில் பவன் குமாரே ‘யூ டர்ன்’ படத்தை தமிழில் தயாரித்து இயக்கப்போகிறாராம். இதில் நாயகியாக சமந்தா நடிக்கவுள்ளாராம். திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கிய சமந்தா ஒப்பந்தமான முதல் படம் இது எனலாம். இப்படத்தின் ஷூட்டிங் ஜனவரியில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]