சபாநாயகர் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு உரிய சிறப்புரிமைகளை மஹிந்தவுக்கு வழங்க தீர்மானம்??

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் அதிரடியாக புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு பாராளுமன்றில் எத்தகைய ஆதரவு உள்ளது என்பது தொடர்பில் தொடர்ந்தும் குழப்பம் நிலவுகின்றது.

புதிய பிரதமர் நியமனம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள போதும் இன்றுவரை தானே பிரதமர் என ரணில் விக்கிரமசிங்க கூறிவருகின்றார்

மேலும் பாராளுமன்றத்தை கூட்டி இந்த சிக்கல் நிலைமைக்கு தீர்வு காணும் படி சர்வதேச மற்றும் உள்ளூர் தரப்புகள் சபாநாயகருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

அது மட்டுமன்றி நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் ஒருவருக்கு கிடைக்கும் ஆசனம் மற்றும் அனைத்து வரப்பிரசாதங்களையும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க சபாநயாகர் கரு ஜெயசூரிய இணக்கம் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமருக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குமாறு நேற்று ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தமைக்கமைய இந்த முடிவை சபாநாயகர் எடுத்து இருக்கலாம் என கூறப்படுகின்றது

சபாநாயகரின் முடிவு குறித்த தகவல்களை சபாநாயகரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]