அரசியல் மோதலை மட்டுப்படுத்துங்கள் சபாநாயகர் கோரிக்கை

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமக்கிடையிலான அரசியல் மோதலை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய கேட்டுக் கொண்டுள்ளார்.

இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான இந்த அரசியல் மோதல்கள், நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கங்களை அடைவதற்கு, தடையாக அமையும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் சபாநாயகர் கரு ஜெயசூரிய எடுத்துக் கூறியுள்ளார்.

சபாநாயகரின் அழைப்பின் பேரில் கொழும்பில் சிறப்பு இடம் ஒன்றில் நடந்த சந்திப்பின் போதே, இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு இரண்டு அரசியல் தலைவர்களும் இணங்கியுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]