சபாநாயகரின் விஷேட அறிவித்தல்- மஹிந்தவின் பிரதமர் பதவி பறிக்கப்படுமா??

இன்று காலை கூடிய பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பிரேரணை மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சபாநாயகரிடம் கையளிப்பட்டிருந்தது.

இது தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடந்த வேளை , மஹிந்ததரப்பினர் குழப்பம் விளைவித்ததின் காரணமாக சபை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக பெரும்பாண்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான விசேட அறிக்கை ஒன்று சபாநாயகர் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

சபாநாயகரின்

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதியும் அது தொடர்பான சபையின் தீர்மானமும் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று உத்தியோகபூர்வமாக மஹிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி பறிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]