சன் லைஃப் தொலைக்காட்சிக்கு லைஃப் கொடுத்துள்ள ‘சொப்பன சுந்தரி’

சன் லைஃப் தொலைக்காட்சிக்கு லைஃப் கொடுத்துள்ள ‘சொப்பன சுந்தரி’

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை தொடர்ந்து சன் லைஃப் தொலைக்காட்சிக்கு உயிறூட்டும் வகையில் நேற்று (திங்கட்கிழமை) 10 மாடல் அழகிகள் கலந்து கொள்ளும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.

‘சொப்பன சுந்தரி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி ‘அமெரிக்காஸ் நெக்ஸ்ட் டாப் மாடல்’ நிகழ்ச்சி போன்று நடத்துகிறார்கள்.

ரியாலிட்டி நிகழ்ச்சியாக ஒளிபரப்பவுள்ள இந்த நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் மாடல் அழகிகள் 10 பேர் கலந்து கொள்கிறார்கள். அவர்களின் பெயர் பட்டியல்…
01.Angelin Grashes
02. Veena Jessi
03. Kaamna
04. Pavi Poovappa
05. Manju Sankar
06. Bavithra
07. Dravya Shetty
08. Chandhana
09. Santana maria Lambert
10. Jaya Lakshmi

இதில் அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு போட்டிகள் நடத்தி யார் அழகி என்று தேர்தெடுப்பார்கள். இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்க இருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இதன் ப்ரொமோ வீடியோவில் சண்டை பலமாக நடக்கிறது. பேச்சு பேச்சாக இல்லாமல் கைகலப்பில் போய் முடிகிறது.

இப்படி சண்டை, சர்ச்சை, வாக்குவாதம், அடிதடி, பரபரப்பு என்று சொப்பன சுந்தரி அமோகமாக வரவேற்புகளை பெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்ப்வுள்ள நிலையில், பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை விட சொப்பன சுந்தரி பார்வையாளர்களை கவரும் என எதிர்பாக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]