சனத் நிஷாந்த பெரேரா உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரது சகோதரரான ஆரச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா ஆகிய இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளனர்.

மே மாதம் 25ஆம் திகதி வரையில் இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்றம் இன்று (19) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆரச்சிகட்டுவ பிரதேச செயலாளரின் மீது தாக்குதல் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கு சிலாபம் மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]