சந்தையில் ஒருபோதும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட முடியாது – ஜனாதிபதி

சந்தையில் ஒருபோதும் அரிசிதட்டுப்பாடு ஏற்பட முடியாதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அரிசி கையிருப்பை பேணுதல் மற்றும் எதிர்கால அரிசி தேவையைக் கண்டறிதல் தொடர்பான விசேடகலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சந்தையில் அரிசி தட்டுப்பாடு நிலவுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு ஏற்ப ஜனாதிபதி இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் களஞ்சியங்களில் காணப்படும் அரசி கையிருப்பு தொடர்பாக ஜனாதிபதி அதிகாரிகளிடம் இதன்போது வினவினார்.

தேவையான அளவில் அரிசி கையிருப்பைபேண வேண்டியதன் அவசியம் தொடர்பாக இதன்போது வலியுறுத்திய ஜனாதிபதி, வர்த்தக அமைச்சு இதனை தொடர்ச்சியாக மேற்பார்வை செய்ய வேண்டுமென்றும் ஆலோசனை வழங்கினார்.

கட்டுப்பாட்டுவிலையைவிட அதிகவிலைக்கு சந்தையில் அரிசி விற்பனை செய்யப்படுவதனால் நுகர்வோர் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி கவனம் செலுத்தியதுடன், கட்டுப்பாட்டு விலையினைவிட அதிகவிலைக்கு அரிசியை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்தல் தொடர்பாகவும் அதிகாரிகளிடம் கருத்துக்கள் வினவப்பட்டன.

மேலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரிசி தேவைக்கேற்ப, அரிசியை இறக்குமதி செய்தல் மற்றும் இதற்காக தனியார்துறையினரை தயார் செய்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]