சந்­தே­கத்­துக்­கி­ட­மான 326 இறு­வட்­டுகளுடன் கைதான ஊட­க­வி­ய­லா­ளரை எதிர்­வரும் 27 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்தரவு

தேசிய தௌஹீத் ஜமாஅத் அடிப்­ப­டை­வாத அமைப்பின் போத­னைகள் மற்றும் பல்­வேறு செயற்­பா­டுகள் அடங்­கிய சந்­தே­கத்­துக்­கி­ட­மான 326 இறு­வட்­டுக்­களை (சீ.டி) வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட சந்­தே­க­ந­ப­ரான இலத்­தி­ர­னியல் ஊடகம் ஒன்றின் ஊட­க­வி­ய­லா­ளரை எதிர்­வரும் 27 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு அநு­ரா­த­புரம் மேல­திக நீதிவான் ஜனக பிர­சன்ன சம­ர­சிங்க நேற்று உத்­த­ர­விட்­டுள்ளார்.

அநு­ரா­த­புரம், உதய மாவத்­தையைச் சேர்ந்த, 55 வய­தான ஊட­க­வி­ய­லா­ள­ரொ­ரு­வரே கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

சந்­தே­க­ந­ப­ரான ஊட­வி­ய­லா­ள­ருக்கு சொந்­த­மான அநு­ரா­த­புரம், உதய மாவத்­தையில் அமைந்­துள்ள வீட்டில் நேற்­று­முன்­தினம் இரா­ணு­வத்­தி­னரும், பொலி­ஸாரும் இணைந்து மேற்­கொண்ட சோத­னை­யின்­போது, அவ்­வீட்­டி­லி­ருந்து சந்­தே­கத்­துக்­கி­ட­மான 326 இறு­வட்­டுக்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

அவ்­வாறே சந்­தே­க­ந­ப­ரிடம் தொடர்ந்தும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளதால் அவ­ருக்கு பிணை வழங்­கு­வ­தற்கு தான் ஆட்­சே­பனை தெரி­விப்­ப­தாக கூறி­ய­துடன், சந்­தே­க­ந­பரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ரவு கோரினார். அதற்­க­மைய, எதிர்­வரும் 27 ஆம் திக­தி­வரை சந்­தே­க­ந­பரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]