சந்தேகத்திற்கு இடமான இலத்திரனியல் பொருட்களுடன் பெண் ஒருவர் கைது

சந்தேகத்திற்கு இடமான இலத்திரனியல் பொருட்களுடன் ஜெர்மன் குடியுரிமை பெற்ற பெண்ணொருவர் இன்று காலை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது

கொழும்பில் இருந்து யாழ் வந்த தொடருந்தில் பயணித்த பெண் மீது சந்தேகம் கொண்ட இராணுவத்தினர் அவரை விசாரணை செய்துள்ளனர். அத்தோடு அவரது உடமைகளையும் சோதனையிட்டுள்ளனர்.

அதன் போது அவரது உடமையில் இருந்த சில இலத்திரனியல் பொருட்களை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

அதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]