சந்தேகத்தினால் கணவன்மார் செய்யும் 5 தவறுகள்…

பலரது வாழ்வில் சந்தேகம் ஏற்பட காரணமாக இருப்பது பணமும், அழகும் தான். “தன்னை விட மனைவி அழகாக இருக்கிறாள், வேறு நபருடன் சென்றுவிடுவாரோ?”, “தன்னை விட அதிகம் சம்பாதிக்கிறாள்…, தன்னை கீழ்தனமாக நினைத்துவிடுவாளோ?” என ஆண்களும்., பெண்களும் இந்த இரண்டு காரணிகளால் தான் அதிகம் சந்தேகம் கொள்கிறார்கள்.

சந்தேகத்தினால் உறவில் ஒருவர் செய்யும் இந்த 5 தவறுகளால் கண்டிப்பாக பெரும் பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு…

பாதுகாப்பின்மை!

தங்கள் துணையை அதிகம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவர்கள், அவர்கள் வெளியே செல்வதை அறிவது, அலைபேசியை ஆராய்வது, அவர்களது கைப்பை மற்றும் பர்ஸ், வங்கி கணக்குகளை திருட்டுத்தனமாக அறிய முயல்வார்கள். இது போன்ற செயல்களால் சந்தேக குணம் கொண்டுள்ள துணை மீதான ஆசை, விருப்பம் குறைந்துவிடும். உறவில் மன அழுத்தம் அதிகரிக்கும். கடைசியாக பிரிவு ஒன்று தான் முடிவு என்ற நிலைக்கு கூட செல்லலாம்.

தடயங்கள்!

பல சந்தேகங்கள் கானல் நீராக தான் இருக்கும். அவர்கள் மனதில் எழும் ஒரு ஹெலசினேஷன் என்று கூட கூறலாம். நடக்காத ஒன்றை, நடந்திருந்தால், நடந்தால் என்ன ஆகும் என்றபடியே சுழன்று கொண்டிருப்பார்கள். நடக்காத தவறுக்கு தடயங்கள் தேடி அலைவார்கள். என்ன நடந்தாலும், அதை தங்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு செல்ஃப் ட்ரிகர் ஆவார்கள். இதனால், அவர்களுக்கு மனநல கோளாறுகள் கூட ஏற்படலாம்.

உதவி நாட மாட்டார்கள்!

தங்களுக்கு எழும் சந்தேகங்கள் மற்றும் அது சார்ந்து நிகழ்வுகளுக்கு யாரிடமும் உதவி நாடலாம் என முனைய மாட்டார்கள். இதனால் அவர்களுக்குள் இருக்கும் சந்தேகம் உண்மையா? அவர்கள் அந்த சந்தேகம் சார்ந்து நடந்துக் கொள்ளும் முறை, செய்யும் செயல்கள் சரியா? தவறா? என அறியாமல் மென்மேலும் தவறுகள் செய்துக் கொண்டே இருப்பர்கள். இதனால் உறவில் நச்சுத்தன்மை தான் அதிகரிக்கும் தவிர ஒரு நல்ல மாற்றம் உண்டாக வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இதற்கு முழு காரணம், அவர்கள் உதவி நாடாதிருப்பதே.

ஓரிரவில் ஏதும் மாறிவிடாது!

சந்தேக குணம் கொண்டவர்கள், உறவில் ஏற்படும் எதிர்வினை அல்லது துணை வருந்துவதை கண்டு திடீரென ஒருநாள், “நான் இனிமேல் இப்படி எல்லாம் நடந்துக் கொள்ள மாட்டேன். என்னை மன்னித்துவிடு” என கூறுவார்கள். ஆனால், இவர்களது குணம் ஓரிரவில் மாறிவிடாது என்பதே உண்மை. மீண்டும் மறுநாள் அதே சந்தேகம் அவர்கள் மனதை அரிக்கத் தொடங்கிவிடும். அவர்கள் மனதில் நம்பகத்தன்மை அதிகரிக்காத வரை, சந்தேக குணம் குறையாது.

எரிமலை!

சந்தேக குணமுடையவர்கள் எரிமலை போன்றவர்கள். தங்கள் மனதிற்குள் பல சந்தேகங்களை போட்டு அழுத்திக் கொண்டே இருப்பார்கள். ஒரு நாள் அழுத்தம் தாங்காமல் எரிமலை போல வெடிக்க துவங்கிவிடுவார்கள். மறைந்திருந்த அவர்களது கோபம், தேடுதல் வேட்டை போன்றவை திடீரென மீண்டும் மேலோங்கும். ஒரு மிருகத்தை போல நடந்துக் கொள்வார்கள்.

துணை மட்டுமின்றி, துணைக்கு பிடித்த விஷயங்கள், நபர்களையும் காயப்படுத்த துவங்குவார்கள். இவர்களை திருத்த மறுமுனையில் இருக்கும் துணை நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும், நிறைய நேரம் செலவிட வேண்டும். அதிக காதலை அவர்களிடம் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆயினும், இது போன்ற சந்தேக குணம் கொண்ட உறவுகள் பெரும்பாலும் முறிவில் தான் முடிகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]