சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவுகள் அதிகமாகும் துலாராசி அன்பர்களே- 12 ராசிகளுக்குமான பொதுமான பலன்கள்

மேஷம்

மேஷம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக உங்களுக்குள் இருந்து வந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரம், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிறைவு கிட்டும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழை#ut #uthoroscope #tamilnews #universaltamil  வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கொஞ்சம் அலைச் சலும், சிறுசிறு ஏமாற்ற மும் வந்து நீங்கும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோ கத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

சிம்மம்

சிம்மம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பிரபலங்கள் உதவு வார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதித்துக் காட்டும் நாள்.

கன்னி

கன்னி: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக் குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் அமைதி உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவுகள் அதிகமாகும். குடும்ப அந் தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சவாலான வேலை களையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு

தனுசு: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சொந்தபந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மகரம்

மகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செல வழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு அசதி, சோர்வு வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தை போராடிவசூலிப்பீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்

மீனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சொத்துப் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். வெற்றி பெறும் நாள்.A

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]