சந்தானம் மீது புகார் – உச்சம் அடைந்த வாய்த்தகராறு

சந்தானம் மீது புகார் – உச்சம் அடைந்த வாய்த்தகராறு.

தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் தற்பொழுது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சென்னை- விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளரான சண்முகசுந்தரம் என்பவரை நடிகர் சந்தானம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தானம் மீது புகார்

சண்முகசுந்தரத்திற்கும் நடிகர் சந்தானத்திற்கும் இடையில் பணம் கொடுக்கல் வாங்கலில், தகராறு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த விவகாரம் தொடர்பாக நடிகர் சந்தானம், கட்டுமான நிறுவன உரிமையாளரான சண்முகசுந்தரத்திடம் வாய்த்தகராறு செய்துள்ளதுடன், அவரை தாக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் வளசரவாக்கம் பொலிஸில் புகார் வழங்கப்பட்டுள்ளதுடன்,
நடிகர் சந்தானத்தின் தரப்பிலும் பொலிஸில் புகார் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தானம் மீது புகார்