சத்தான முளைகட்டிய பயறு சாலட் செய்வது எப்படி?

சத்தான முளைகட்டிய பயறு சாலட் செய்வது எப்படி?

நாம் எனது தினசரி நாட்களில் ஏதேனும் ஒரு காய்கறிகளை உட்கொள்வது உடலின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

அந்தவகையில் தினமும் சாலட் சாப்பிடுவது ஒரு நல்ல உணவு பழக்கவழக்கமாக கருதப்படுகின்றது. எனவே இன்று முளைக்கட்டிய பயறு சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

முளைகட்டிய பாசிப்பயறு – 3 தேக்கரண்டி
முளைகட்டிய வேர்க்கடலை – 1 தேக்கரண்டி
துருவிய கேரட் – 2 தேக்கரண்டி
உப்பு – 1 சிட்டிகை,
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
மிளகு சீரகப் பொடி – 1ஃ4 தேக்கரண்டி

செய்முறை

பாசிப்பயறு, மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை முதல் நாள் காலையில் ஊறவைத்து, இரவு, வலை போல் இருக்கும் துணியில் கட்டி வைத்தால் அவை மறுநாள் காலையில் முளைத்து விடும்.

ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு அதனுடன் முளைக்கட்டிய பாசிப்பருப்பு, வேர்க்கடலை, துருவிய கேரட், உப்பு, எலுமிச்சை சாறு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும். சுவையான முளைகட்டிய பயறு சாலட்தயார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]