சத்தரசிகிச்சையில் பறிபோனது தாய் மற்றும் சிசுவின் உயிர்கள்

கிண்ணியா தள வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிகக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாள ஒருவர் தெரிவித்தார்.

கர்ப்பிணியான குறித்த பெண்ணின் சிசுவை மீட்கும் நோக்கில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி சிசு உயிரிழந்துள்ளதாகவும், தாயார் இன்று உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

குறித்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், டெங்கு நோயால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதும் நோய்கள் காணப்பட்டதா என்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சட்ட வைத்திய பரிசோதனை நடைபெற வுள்ளதாகவும் அப்பரிசோதனை நிறைவடைந்தப் பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.