சண்டை காரணமாக காதலியை ஆன் லைனில் விற்க முயன்ற காதலன்- இப்படியும் ஒரு காதலா??

பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் தன் காதலியை ஆன் லைனில் விற்க முயன்றுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் எசக்ஸ் பகுதியைச் சேர்ந்த டேல் லீக்ஸ் என்பவர் தன் காதலியுடன் ஏற்பட்ட சின்ன சண்டை காரணமாக காதலியை பழிவாங்குவதற்காக ஒரு விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.

அதாவது கடந்த செப்டம்பர் மாதம் 29-ஆம் திகதி தன் காதலியின் புகைப்படத்தை பிரபல இணையதளமான E-bay-யின் வணிக நிறுவனத்தின் தளத்தில் Girlfriend for sale என்று விளம்பரம் கொடுத்துள்ளார்.

அதில் காதலியான கெல்லியின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்து, அதற்கு கீழ் அவரைப் பற்றி மோசமாக குறிப்புகளை எழுதியுள்ளார். டேல் கெல்லியின் புகைப்படத்தை பதிந்த சில மணிநேரத்தில் இ-பே தளம் இங்கு மனித உறுப்புகளை விற்பனை செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது என்று எச்சரிக்கை தகவல் கொடுத்து, கெல்லியின் புகைப்படத்தை தளத்தில் இருந்து நீக்கிவிட்டது.

ஆனால், அதற்குள் கெல்லி விற்பனைக்கு என்னும் விளம்பரத்தை ஆயிரக்கணக்கானோர் பார்த்துவிட்டனர். நூற்றுக்கணக்கானோர் ஏலத்துக்கான மதிப்பையும் பதிவு செய்தனர்.

விளம்பரம் நீக்கப்படுவதற்கு முன் ஏலத்தின் மதிப்பு இலங்கை ரூபாயில் 1,56,36,603 ஆக இருந்தது. விளம்பரத்துக்குக் கீழே டேல்லை விமர்சித்தும் திட்டித் தீர்த்தும் கமென்ட் செய்திருந்தனர். உன் காதலியை நான் வாங்கி கொள்கிறேன் என்று பலர் பதிவிட்டிருந்தனர்.

சண்டை காரணமாக சண்டை காரணமாக

ஆனால் கெல்லியுடன் டெல் அன்றே சமாதானம் ஆகிவிட்டதால், புகைப்படத்தை இ-பே தளத்தில் பதிவிட்டிருந்ததை மறந்து அன்றாட வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கெல்லியுடன் டின்னருக்குச் சென்ற டேல்லுக்கு, இ-பே விளம்பரம் குறித்து நினைவுவர, உடனடியாக மொபைலை எடுத்துப் பார்த்தார். அவரின் விளம்பரம் நீக்கப்பட்டிருந்தது. கூடவே ஆயிரக்கணக்கான மெசெஜ்களும் வந்திருந்தன. அதிர்ச்சியில் உறைந்த டேல், இந்த விஷயத்தை கெல்லியிடம் கூறினார்.

முதலில் விஷயத்தை விழுந்து விழுந்து சிரித்த கெல்லி, இனி இப்படிச் செய்யக் கூடாது எனக் எச்சரித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]