‘சண்டக்கோழி-2’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது

‘சண்டக்கோழி-2’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தில் இப்படத்திற்கு எதிர்பார்ப்புக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

லிங்குசாமியின் இயக்கத்தில் ‘சண்டக்கோழி-2’ உருவாகி வருகின்றது. இப்படத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர்.

மேலும் ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பெக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

விஷாலின் 25-வது படமாக இந்த படம் உருவாகி வருகிறது. படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அக்டோபர் 18-ல் ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக படத்தின் முதல் சிங்கிள் வருகிற ஆகஸ்ட் 20-ஆம் திகதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]