‘சண்டக்கோழி-2’ படத்தின் இசை வெளியீட்டு திகதி அறிவிப்பு
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘சண்டக்கோழி-2’. இதில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர்.
அத்தோடு ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விஷாலின் 25-வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வருகிற செப்டம்பர் 24-ஆம் திகதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் திகதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ‘சண்டக்கோழி-2’ ரிலீஸாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Happy to share that #Sandakozhi2 Audio launch will be on September 24th & it will be a Double Celebration for #Vishal25. @VishalKOfficial @thisisysr @KeerthyOfficial @varusarath @jayantilalgada @LycaProductions @shakthi_dop @Cinemainmygenes @brindasarathi @gopiprasannaa pic.twitter.com/lsnAMSAyIg
— Lingusamy (@dirlingusamy) September 20, 2018
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]