சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா அபராதம்

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவின் புத்தம்புரி ஆற்றில் இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஏழு பேருக்கும் தலா ஒரு இலட்சம் வீதம் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவின் புத்தம்புரி ஆற்றில் இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வதாக வவுணதீவு அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத்தகவலையடுத்து வவுணதீவு படைமுகாம் பொறுப்பதிகாரி எம்.எம்.என்.கே. மாரசிங்கவின் தலைமையிலான படையினர் காட்டில் பதுங்கியிருந்து மணல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு உழவு இயந்திரங்கள் இழுவைப்பெட்டிகள் சகிதம் 28.09.2018 இரவு கைப்பற்றி கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்ட சாரதிகள் ஏழுபேரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு புதன்கிழமை (03) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் நீதவான் கறுப்பையா ஜீவராணி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது தலா ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் ஏழு உழவு இயந்திரங்கள் இழுவைப்பெட்டிகள் விடுவிக்கப்பட்டன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]