சட்ட விரோத தேக்கு மரம் மீட்பு

மட்டக்களப்பு- தொப்பிகல நரக்கமுல்ல அரசாங்க காட்டில் சட்டவிரோதமாக வெட்டி மிகவும் நுட்பமான கடத்தப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை இன்று (13) புல்லுமலை வட்டார வன அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மரக்கட்டிகள் கடத்தப்பட்ட உழவு இயந்திரத்தின் சாரதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளார்.

உழவு இயந்திரத்தின் இழுவைப்பெட்டியின் கீழ்ப்பகுதியில் மேலதிகமாக தட்டு ஒன்றை அமைத்து அதில் மரக்கட்டிகளை அடுக்கி பிரத்தியேக மூடியிட்டு மறைக்கப்பட்டிருந்தது. இழுவைப்பெட்டியின் மேற்தளத்தில் விறகுகள் போடப்பட்டிருந்தன. 18 மரக்கட்டிகளும் 16 மரப்பலகைகளும் இதில் காணப்பட்டன.

வன பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத்தகவலொன்றையடுத்து இந்த உழவு இயந்திரம் கூமாச்சோலைப் பகுதியைக் கடக்க முற்பட்டபோது வழிமறித்து சோதனையிடப்பட்டதாக வன உத்தியோகத்தர் இந்திக்க றுகுனு ஹேவா தெரிவித்தார்.

வன பாதுகாப்பு அதிகாரி எம்ஏ. ஜாயா தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகநபர் கரடியனாறு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வன இலாகா அதிகாரி என்.நடேசன் தெரிவித்தார்.​

சட்ட விரோத தேக்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]