சட்ட சிக்கல் இல்லை என்றால் மஹிந்த களமிறங்குவார்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களுடனும் தான் எவ்வித பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளவில்லை என, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவ்வாறான குழுக்களை ஏற்றுக் கொள்ள தயாரில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்கங்களுக்கு கருத்து வெளியிடும் போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மக்களால் நிராகரிக்கப்பட்ட இரண்டு கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைத்திருப்பதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சட்ட சிக்கல் இல்லை என்றால் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ களமிறங்குவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு இல்லாவிட்டால், மஹிந்த ராஜபக்ஷ கூறும் நபருக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரண்டு பக்கங்களிலும் கால் வைத்திருக்கும் நபர்கள் தொடர்பில், எதிர்காலத்தில் மக்களே தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுளளார

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]