சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் வாகனங்களுடன் கைது

மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு பொலிஸ் பிரிவின் முந்தானைஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வரை செவ்வாய்க்கிழமை 09.10.2018 வாகனங்களுடன் கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிநோதமாக ஆற்றுமணலை அகழ்வதில் நபர்கள் ஈடுபகின்றார்கள் என்ற தகவல் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றதின் பேரில் ஸ்தலத்திற்குச் சென்று மறைந்திருந்த பொலிஸார் நபர்களைக் கைது செய்ததோடு வாகனங்களையும் கைப்பற்றியதாகத் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 3 உழவு இயந்திரங்களும் ஒரு ரிப்பர் வாகனமும் கூடவே அதனதன் சாரதிகளுடன் கைப்பற்றப்பட்டன.

ஆற்றுமணல் ஏற்றி நிரப்பப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட 4 வாகனங்களுடன் அவற்றின் 4 சாரதிகளும் புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இச்சம்பவங்கள் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]