சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் மீட்பு

சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் மீட்பு

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகளை தாண்டியடி விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

வியாழக்கிழமை (17) நடைபெற்ற இச்சம்பவத்தில் சிறியரக கென்ரர் வாகனத்தில் விலங்கியச் சட்டத்தை மீறப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட ஐந்து மாடுகள் மீட்கப்பட்டதுடன்; ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வட்டா ரக வாகனமும் கைப்பற்றப்பட்டன.

இதில் எருமை மாடுகள் இரண்டும் பசு நாம்பன் மாடுகள் மூன்றும் காணப்பட்டன.

கொக்கட்டிச்சோலைப்பகுதியிலிருந்து மண்முனை நோக்கி குறித்த வாகனம் வேகமாக சென்ற நிலையிலையே மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், அடைக்கப்பட்டபட்ட வாகனங்களில் சட்டவிரோதமான முறையில் மாடுகள் கொண்டுசெல்லப்படுகின்றன, இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கூறப்பட்ட நிலையிலே அடைக்கப்பட்ட வாகனத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமான முறையில் சட்டவிரோதமான முறையில் சட்டவிரோதமான முறையில் சட்டவிரோதமான முறையில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]