சட்டவிரோதமான அரசாங்கத்தை உருவாக்கிய மைத்திரி, மஹிந்த- அநுர குமார திசாநாயக்க சாடல்

சட்டவிரோதமாக ஏற்படுத்தப்பட்ட அரசாங்க்ததை உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க, அனைத்து அதிகாரங்களும் பொருந்திய ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் மைத்திரிபால சிறிசேன மஹிந்த ரஜபக்ச கூட்டணி மக்கள் ஆணை, நீதிமன்ற கட்டமைப்பு என அனைத்தையும் புறந்தள்ளி தமது சூழ்ச்சியை முன்கொண்டு செல்ல முயற்சித்தனர். அந்த சூழ்ச்சியை எப்படியாயினும் வெற்றிகொள்ள வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் தொடர்ச்சியாக செயற்பட்டனர். அந்த நோக்கத்திலேயே அவர்கள் அரசியல் யாப்பினை மீறி பல செயற்பாடுகளை முன்னெடுத்தனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் அரசாங்கம் ஒன்று இல்லாத நிலை தோன்றியது. அந்த சந்தர்ப்பத்தில் புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த வேண்டிய ஜனாதிபதி அதனை செய்யவில்லை. சட்டவிரோத அரசாங்கம் ஜனாதிபதியை தலைவராகக் கொண்டு பல பணிகளை முன்னெடுத்தது. எங்களுக்குள் கொள்கை ரீதியாக வேறுபாடுகள் காணப்படலாம்.

எனினும் ஆட்சி அதிகாரம் இல்லாத ஒரு அரசாங்கம் எவ்வாறு நாட்டை ஆள முடியும். 14ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பிரேரணையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனியும் நாட்டு மக்களை ஏமாற்றாது நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்வதோடு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள தரப்பிற்கு ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். இதனை ஜனாதிபதி செய்வார் என எதிர்ப்பார்க்கின்றோம்.

இதுவொரு மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி. இந்த இராஜ துரோகத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து தண்டனை வழங்கும் வகையில் நாடாளுமன்றத்தை மையப்படுத்தி ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். நாடாளுமன்றில் சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு அதிகாரம் மிக்க ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டு அதன் ஊடாக நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். அதற்கான பணிகளை மக்கள் விடுதலை முன்னணி முன்னின்று முன்னெடுக்கும்.

இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அநுர குமார திசாநாயக்க, மைத்திரிபால சிறிசேன – மஹிந்த ரஜபக்ச கூட்டணி, மக்கள் ஆணைக்கு எதிராக முன்னெடுத்த சூழ்ச்சிக்கு, உச்ச நீதிமன்றம் உரிய பாடம் கற்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ச கூட்டணி மக்கள் ஆணை, நீதிமன்ற கட்டமைப்பு என அனைத்தையும் புறந்தள்ளி தமது சூழ்ச்சியை முன்கொண்டு செல்ல முயற்சித்தனர். அந்த சூழ்ச்சியை எப்படியாயினும் வெற்றிகொள்ள வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் தொடர்ச்சியாக செயற்பட்டனர். அந்த நோக்கத்திலேயே அவர்கள் அரசியல் யாப்பினை மீறி பல செயற்பாடுகளை முன்னெடுத்தனர் என தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]