சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோதமாக

மட்டக்களப்பு தொப்பிகல அரசாங்க காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு விற்பனைக்காக ஏழு மாட்டுவண்டில்களில் எடுத்துச்செல்லப்பட்ட 28 தேக்கு மரக்குற்றிகளை திங்கட்கிழமை (20) கரடியனாறு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள் மாடுகளை அவிழ்த்துவிட்டு தப்பியோடியபோதிலும் மரக்குற்றிகள் ஏற்றப்பட்ட ஏழு வண்டில்களையும் இரண்டு மாடுகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை பதியதலாவ பிரதேசத்திலிருந்து செங்கலடி – பதுளை வீதி வழியாக மட்டக்களப்பிற்கு அனுமதிப்பத்திரமின்றி 81 தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த லொறி மற்றும் சாரதியையும் கைப்பற்றியுள்ளதாக கரடியனாறு பொலிஸார் கூறினர்.

சட்டவிரோதமாக

தொப்பிகல அரசாங்க காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டுப்பட்டு காடழிப்பு நடைபெறுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பொலிஸார் அங்கு சென்றபோது மரக்குற்றிகளை ஏற்றிக்கொண்டு ஈரளக்குளம் பிரதேசத்தினூடாக வந்துகொண்டிருந்த மாட்டுவண்டிக்காரர்கள் பொலிஸாரை அவதானித்து மாடுகளை அவிழ்த்துவிட்டு ஓட்டம்பித்துள்ளனர்.

இதன்போது ஏழு மாட்டு வண்டில்களையும் இரண்டு மாடுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இக்குற்றச்செயல் தொடர்பான அறிக்கை 22.11.2017 புதன்கிழமையன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படுமென கரடியனாறு பொலிஸார் கூறினர்.

இதற்கிடையே அனுமதிப்பத்திரமின்றி மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற லொறியின் சாரதியான பதியதலாவையைச் சேர்ந்த ஜேஎம்ஜி. பண்டார நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து ஓரிலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச்சம்பவம் குறித்த நீதிமன்ற விசாரணை எதிர்வரும் ஜனவரி 24 ஆந்திகதி நடைபெறவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]