இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள ரியூனியன் தீவுக்கு, சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 90 இலங்கையர்கள் நீர்கொழும்பு கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 89 ஆண்களும் 1 பெண்ணும் உள்ளடங்குவதாக கடற்படை பேச்சாளர் தினேஸ் பண்டார தகவல் வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையின் பல்வேறு இடங்களில் வசிப்பவர்கள் என்றும் கூறப்படுகின்றது.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு, தொடுவாவ, உடப்பு, ஹலாவத்த, மன்னார், அம்பாறை மற்றும் மாத்தளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பு கடற்பரப்பில், சந்தேகத்துக்கு இடமான முறையில் டோலர் படகொன்று தரித்து நிற்பதாக, கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மேற்படி 90 பேரும் கடல் மார்க்கமாக ரியூனியன் தீவுக்கு செல்ல முற்பட்டதாக தெரியவந்துள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]