சட்டவிரோதமாக மரங்களை தரித்தவர்கள் தப்பியோட்டம்

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை நீர்தேகத்திற்கு அருகில் காணப்படும் வனப்பகுதியின் எல்லையில் காணப்படும் பலா மரங்களை இனந்தெரியாதவர்கள் தரித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற நாவலப்பிட்டி பொலிஸாரை கண்டு சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தரிக்கப்பட்டிருந்த பலா மர குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், தப்பியோடிய சந்தேக நபர்களை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]