சட்டவிரோதமாக தங்கியிருந்த 6 இந்திய பிரஜைகள் கைது

சட்டவிரோதமாக தங்கியிருந்த 6 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிலபம் பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த 22 இற்கும் 38 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய பிரஜைகள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில், 28 வயதுடைய முந்தலம் பிரதேசத்தைச் ​சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அடுத்த மாதம் ஏப்ரல் 02ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]